வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் கூட்டுத்தாபனம் (NWCL)
வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் கூட்டுத்தாபனம் (NWCL), வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் கம்பெனி 2003 மார்ச் 23ஆம் திகதி கூட்டிணைக்கப்பட்டது. முதலீட்டு முகாமையாளர் என்ற வகையில் வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் கூட்டுத்தாபனம் (NWCL), இடர் குறைவாக அதன் வருமானத்தை அதிகரிப்பதை செயல் நோக்கமாகக் கொண்டு ஆவுகுஇன் விடயங்களை முகாமைப்படுத்துகின்றது. வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் கூட்டுத்தாபனம் (NWCL) ஆவுகுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகின்றது.
- உயர்ந்த பெறுபேறுகளைத் தரும் முதலீட்டு மூலோபாயங்கள்
- இடர் மதிப்பீட்டு மற்றும் தணிக்கும் மூலோபாயங்கள்
- நிதிசார்ந்த துறை சந்தைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறந்த கொள்கைகளையும் கைத்தொழில் - அனுபவங்களையும் பயன்படுத்தி முதலீட்டு சூழலைப் பகுப்பாய்வுசெய்தல்.
- பாதுகாப்பையும் உயர் வருமானத்தையும் தருகின்ற நிதிசார் உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
- பாதுகாப்பையும் உயர் வருமானத்தையும் அளிக்கின்ற நிதிசார் உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
|
வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் பிணையங்கள் (NWSL)
அரசாங்க வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் கம்பெனி என்ற வகையில் வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் பிணையங்கள் (NWSL) 2003 யூன் மாதம் 23ஆம் திகதி கூட்டிணைக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாட்டு விடயத்திற்கும் பதிவுசெய்யப்பட்ட பொருள் கையிருப்பு மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்திற்கும், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்திற்கும் அமைவாக முதனிலை வியாபாரியாக வியாபாரத்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கம்பெனி பதிவுசெய்யப்பட்டது.
|
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) மாலபே (SLIIT)
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) மாலபேயில் நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான காணியில் லலித் அத்துலத்முதலி மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் 50 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டு 1999ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
தற்பொழுது உலகத்தின் பல பாகங்களைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் உட்பட 7000க்கு மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு என்பவற்றை வழங்கி வெற்றிகரமாகச் செயற்படுகின்றது. வியாபாரம், கணினி மற்றும் பொறியியல் ஆகிய மூன்று பீடங்களில் 9000 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
மேலும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) இலங்கையில் உள்ள முன்னணி பல்தேசிய மற்றும் உள்ளூர் கைத்தொழில் நிறுவனங்களில் சேவையிலீடுபட்டுள்ள மாணவர்களுக்கு அவர்கள் கற்றுக்கொண்டதற்கு அப்பால் அறிவை விருத்திசெய்துகொள்ளுவதற்கு சேவை இடை நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் மாணவர்கள் அவர்களின் தொழில்சார் ஆளுமையை விருத்திசெய்துகொள்ளுகின்றனர். அத்துடன் அவர்களின் அறிவை செயல்முறையில் பயன்படுத்திக்கொள்ளுவதற்கு பெரும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
|