லலித் அத்துலத்முதலி மகாபொல உயர் கல்வி புலமைப்பரிசு நம்பிக்கை நிதியம் 1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க பாராளுமன்ற சட்த்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் 3ஆம் பிரிவின் பிரகாரம் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் கட்டுப்படுத்தல் என்பவை நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற கௌரவ. அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவர்கள் வர்த்தக மற்றும் கப்பல் அலுவல்கள் அமைச்சராக இருந்தபோது 1980ஆம் ஆண்டு நடைபெற்ற வர்த்தக சந்தை ஊடாக, திறந்த பொருளாதாரத்தின் நன்மைகளும் அறிவும் கிராமிய மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் "மகாபொல" எண்ணக்கருவை ஸ்தாபித்தார்.

1982 முதல் 2017 வரையிலான கடந்த 35 ஆண்டுகளில் அனைத்து 15 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், உயர் கல்வி நிறுவகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் என்பவற்றின் மாணவர்களுக்கு மகாபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியம் 288,893 புலமைப்பரிசுகளை வழங்கியுள்ளது. அதன் பெறுமதி 13.3 பில்லியன் ரூபாவாகும்.

தற்பொழுது, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கும் மகாபொல நம்பிக்கை நிதியத்தின் மூலம் 17,000க்கு மேற்பட்ட புலமைப்பரிசுகள் வருடாந்தம் வழங்கப்படுகின்றன.

இந்த நிதியம் திரட்டிய நிதியத்தின் கீழ் வராத உயர் கல்வி நிலையங்களுக்கு நிறுவன மற்றும் நிதிசார் உதவிகளை வழங்குகின்றது. அத்துடன் இளைஞர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்கு புலமைப்பரிசுகளை வழங்குகின்றது. இதன் நிர்வாக பணிகள் சுயாதீன நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபையினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் தலைவராக கௌரவ பிரதம் நீதியரசர் இருக்கின்றார்.