1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டம் திருத்தப்பட்டு லலித் அத்துலத்முதலி மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என மீள் பெயரிடப்பட்டது

lalith atulatmdali pc13இந்த புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என அழைக்கப்பட்டது. அதன் ஸ்தாபகர் லலித் அத்துலத்முதலியின் பெயரை இடத் தீர்மானிக்கப்பட்டது.

2018 ஆகஸ்ட் 28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது இந்த நிதியத்திற்கு "லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக பின்வறுமாறு சட்டத்தின் 15வது பிரிவு மற்றும் மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பெயரை மாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரமளித்துள்ளது.

  • மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை "லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம்" என மாற்றுதல்
  • மேற் குறிப்பிட்ட 1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தில் மேலதிக ஏற்பாடாக சேர்த்துக்கொள்ளுவதற்கு 1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தின் 15ஆம் பிரிவு திருத்தப்பட்டது. அதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட வாசகம் "நம்பிக்கை பொறுப்பாளர்கள் உட்பட நிதியத்தின் அதிகாரிகளும் ஊழியர்களும் 1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அரச சொத்துக்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் தண்டனை சட்டக் கோவையின் முன்மொழிவின்படியும் அரசாங்க ஊழியர்கள் என்ற பிரிவுக்குள் அடங்குகின்றனர்" என்பதாகும்.