பின்வரும் தேவைகளும் நிபந்தனைகளும் மகாபொல புலமைப்பரிசுக்கு தகுதி பெறுவதற்கும் கல்வி கற்கும் காலப்பகுதியில் குறிப்பிட்ட புலமைப்பரிசின் சார்பாக தவணைக் கொடுப்பனவைப் பெறுவதற்கும் ஏற்புடையதாக இருக்கின்றன.
- புலமைப்பரிசு வழங்குவதற்காக, புலமைப்பரிசு பெறுகின்றவர்களின் கல்வியின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம் வழங்குகின்ற பரிந்துரையின் மீது புலமைப்பரிசு மாதாந்தம் தவணை அடிப்படையில் வழங்கப்படும்.
- பல்கலைக்கழக புலமைப்பரிசுக்கு ஒரு கல்வி ஆண்டுக்கு ஆகக்கூடியது 10 புலமைப்பரிசு தவணைகளில் செலுத்தப்படும்.
- பாடத்திற்காக குறித்துரைக்கப்பட்ட விரிவுரைகள், பாட வகுப்புகள் மற்றும் செயன்முறை வகுப்புகள் என்பவற்றிற்கு ஒழுங்காக சமுகமளித்திருக்க வேண்டும். அத்துடன் 80% வருகை பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முரண்படும் சந்தர்ப்பங்களில் அது சம்பந்தமாக பல்கலைக்கழகங்களின் பரிந்துரையின் மீது புலமைப்பரிசு கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்.
- மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் புலமைப்பரிசு பெறுகின்றவர்களுக்கு பாடநெறி நடத்தப்படுகின்ற காலத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு தவணைப் பணம் மாத்திரம் வழங்கப்படும்.
- புலமைப்பரிசு தவணைப் பணம் செலுத்துவதற்காக புலமைப்பரிசு பெறுகின்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகம் பரிந்துரைசெய்கின்றது.
- இந்த புலமைப்பரிசை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அதே பாடநெறியுடன் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கும் ஏனைய கற்கைகளுக்கும் மாணவ உதவி தொகை பெற உங்களுக்கு அனுமதியில்லை. அந்த மாணவர் அத்தகைய புலமைப்பரிசுக்குத் தகைமை பெற்றால் முன்னைய புலமைப் பரிசை மாத்திரம் பெற்றுக்கொள்வதா அல்லது அதை இரத்துச்செய்துவிட்டு புதிய புலமைப் பரிசைப் பெற்றுக்கொள்வதா என்பதை மாணவர் தெரிவுசெய்து கொள்ளலாம். அத்தகைய விடயங்களில் மாணவர் அதுபற்றி உடனடியாக அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டும்.
- கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் புலமைப்பரிசு இரத்துச் செய்யப்படும். அது சம்பந்தமாக சமர்ப்பிக்கப்படும் மேன் முறையீடு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
- பாடத்திற்கு சமூகமளிக்காமை
- பாடநெறிக்கு நீண்டகால வரவின்மை
- வருடாந்த பரீட்சையில் சித்தியடையத் தவறுதல்
- பாடநெறியைக் கைவிடுதல்
- ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக வகுப்பு இடை நிறுத்தப்படுதல்
- பகிடிவதை செய்தது சம்பந்தமாக தண்டனை பெறுதல்
- துர்நடத்தை, பால்ய குற்றச்செயல்கள் அல்லது துஷ்பிரயோகம் அல்லது ஏனைய குற்றச்செயல்கள் என்பவற்றிற்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருத்தல் என்பவற்றிற்காக பல்கலைக்கழகத்தினால் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு மாணவர் தண்டிக்கப்பட்டிருத்தல்.
- அரச சொத்துகக்ளுக்கு அல்லது பல்கலைக்கழ சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்காக தண்டனை பெற்றிருத்தல்.
- வருமான உற்பத்திக்காக வியாபாரத்தில், சேவையில் அல்லது தொழிலில் ஈடுபடுவதன் காரணமாக புலமைப்பரிசு தவணைப் பணமும் தகைமையும் தொடாரப்படாமலிருத்தல்.
- ஒரு மாணவன் தவிர்க்க முடியாத மற்றும் கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்கள் மீது தன்னுடைய படிப்பை ஒத்திவைப்பதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளுதல் அந்த மாணவன்/மாணவி அடுத்து வரும் சம்பந்தப்பட்ட வருடத்தில் புலமைப்பரிசைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அந்த மாணவன்/மாணவி ஒத்திவைத்தாலும் கூட புலமைப்பரிசு வழங்கும் அவருடைய ட புலமைப்பரிசு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- If the study course in the university is later changed, when such a student is found eligible for a Mahapola scholarship also under the new study course based on the marks that the student has scored, a new scholarship will be awarded as per the recommendation of the University Grants Commission. In order to be eligible for that scholarship, it should be recommended by the university.
- மகாபொல உயர் கல்வி புலமைப்பரிசு நம்பிக்கை பொறுப்பு நிதியம் சம்பந்தப்பட்ட புலமைப்பரிசுகள் அல்லது புலமைப்பரிசு தவணைப் பணம் தொடர்பாக இறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பணிப்பாளர்
மகாபொல உயர் கல்வி புலமைப்பரிசு நம்பிக்கை பொறுப்பு நிதியம்