காலஞ்சென்ற கௌரவ லலித் அத்துலத்முதலி அவர்களால் பின்வருவனவற்றுடன் சேர்த்து இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வியை தொடர்வதற்கு நிதி தேவையுள்ள தகுதியுள்ள மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில் 'மகாபொல' எண்ணக்கரு ஸ்தாபிக்கப்பட்டது.
- இளைஞர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் ஆற்றல்களையும் திறன்களையும் விருத்திசெய்துகொள்ளக்கூடிய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவகங்களை அமைத்து முகாமைப்படுத்துவதற்கு உதவுதல் மற்றும்
- கல்விக்கு மேலதிகமான விடயங்களில் ஈடுபடுகின்ற பாடசாலைகள், கல்வி நிறுவகங்கள என்பவற்றிற்கு நிதி உதவியளித்தல்
அதனால் நம்பிககை பொறுப்பாளர்கள் சபை 2005ஆம் ஆண்டு யூலை மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற 46வது கூட்டத்தில் "பாடசாலை அபிவிருத்தி நிதியத்தை" அமைக்கத் தீர்மானித்தது. நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை அத்திடியவிலிருந்த மகாபொல காணியின் விற்பனை நடவடிக்கையிலிருந்து பெறப்பட்ட 221.5 மில்லியன் ரூபாவையும் ராஜகிரியவில் ஒரு காணிக்காக ஆவுகு னால் முற்பணமாகச் செலுத்தப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையினல் மீளளிக்கப்பட்ட ரூ. 93.725 மில்லியன் பணத்தையும் ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து பாடசாலை அபிவிருத்தி நிதியத்தின் மூலதனம் 315 மில்லியன் ரூபா வரை அதிகரித்தது. பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக மூலதன செலவுகளுக்கு வட்டி வருமானத்தை மாத்திரம் பயன்படுத்த முடியும்.
தற்பொழுது மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியம் பிரதானமாக புலமைப்பரிசு வழங்குவதில் கவனம் செலுத்துவதால் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.