புலமைப்பரிசு நிதியத்தைப் பலப்படுத்துவதற்காகவும் மேலதிக வருமானத்தைப் பெறுவதற்காகவும் மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசு நம்பிக்கை நிதியம் மஹபொல இணையவழி லொத்தரை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த லொத்தர் இலங்கையின் பாரம்பரிய சந்தையில் ஊடுறுவுவது குறைவாகவே இருக்கிறது. ஆயினும் அணுகாத ஒரு பகுதி சந்தையில் இருக்கிறது. அதுதான உயர் மக்களும் வேலைசெய்கின்ற மக்களுமாவர். இவர்கள் இலங்கையில் தொடர்ச்சியாக லொத்தர் வாங்குவதில்லை. எனவே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலகட்டத்தில் இதற்குள் காலடியெடுத்து வைத்து இணையவழி லொத்தர்களை அறிமுகப்படுத்துவது சிறந்த சந்தர்ப்பமாகும்.

லொத்தர் சந்தைக்கு புதிய சந்ததியை உருவாக்குவதற்கும் ஒழுங்காக லொத்தர் வாங்குவதை இலகுபடுத்துவதற்கும் இணையவழி லொத்தர் சந்தை தேவையான ஒன்றாகும்.

அதற்கு அமைவாக, மஹபொல நம்பிக்கை நிதியம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மஹபொல இணையவழி லொத்தரை மீள ஆரம்பிக்க எதிர்பார்க்கிறது.

சாத்தியமான மொத்த சந்தையை அடைவதை உறுதிப்படுத்துவதற்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை ஓர் ஆய்வை நடத்த தீர்மானித்தது. அது இப்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளது.