வறுமையை ஒழிக்கும் நோக்கில் கல்வியறிவுடைய சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக கிராமிய சமூகத்திற்கு சிறந்த பொருளாதாரத்தின் நன்மைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட காலஞ்சென்ற கௌரவ லலித் அத்துலத்முதலி (சனாதிபதி சட்டத்தரணி) அறிமுகப்படுத்திய 'மகாபொல' எண்ணககரு முதலில் வர்த்தக சந்தையாக மாத்திரம் இருந்தது.

வர்த்தக சந்தையும் கல்விக் கண்காட்சியும் கிராமிய பாடசாலைகளில் ஒழுங்குசெய்யப்பட்டன. அவற்றின் நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்பட்ட வருமானம் அந்தப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

வர்த்தக சந்தை மற்றும் கல்வி கண்காட்சி கிராமிய பாடசாலைகளில் ஒழுங்குசெய்யப்பட்டன. அதற்கான நுழைவுக் கட்டணங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் அப்பாடசாலைகளின் உட்டமைப்பு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட்டன. 1980 முதல் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் பெருமளவில் மகாபொல வர்த்தக சந்தையில் அவர்களுடைய ஆர்வத்தையும் அவர்கள் கவரப்பட்டதையும் எடுத்துக்காட்டத் தொடங்கினர். இருப்பினும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து அது குறைந்துவிட்டது. கண்காட்சிகள் மிகையான வருமானத்தைப் பெறாததன் காரணமாக மகாபொல வர்த்தக சந்தையும் கண்காட்சியும் கடந்த சில வருடங்களாக செயலிழந்துவிட்டது.

2018 யூலை 13ஆம் திகதி நடைபெற்ற 68வது நம்பிக்கை பொறுப்பாளர்கள் கூட்டத்தில் 2018ஆம் ஆண்டிலிருந்து வர்த்தக சந்தையையும் கண்காட்சியையும் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் மகாபொல வர்த்தக சந்தையையும் கண்காட்சியையும் மீள ஆரம்பிப்பதற்கு அவர்களுடைய உட்கடடமைப்பு வசதிகளையும் நிறுவன உதவிகளையும் வழங்குவதற்கு அவர்கள் உடன்பட்டார்கள்.

அதற்கு அமைவாக மகாபொல வர்த்தக சந்தையையும் கண்காட்சியையும் 2018 டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.