slit

மகாபொல புலமைப்பரிசு நம்பிக்கை பொறுப்பு நிதியம் 1981ஆம் ஆண்டு (1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க) பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட தர்ம நம்பிக்கை பொறுப்பாகும்.slit2 இலங்கையில் தொழில்நுட்ப கல்வியையும் இரண்டாம் நிலைக் கல்வியையும் மேம்படுத்துவதற்காக உயர் கல்வி நிறுவகங்களை முகாமைப்படுத்துவதற்கு உதவுதல் இதை அமைத்ததன் ஒரு நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைந்து நம்பிக்கை பொறுப்பாளர்களின் அங்கீகரத்துடன் 1998இல் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தை (SLIIT) ஸ்தாபிப்பதற்கு உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு வர்த்தக மற்றும் உணவு கௌரவ அமைச்சர் கிங்ஸ்லி டி விக்கிரமரத்ன அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்தார். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.

அதற்கு அமைவாக, மகாபொல புலமைப்பரிசு நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்குச் சொந்தமான மாலபேயில் உள்ள 25 ஏக்கர் காணியில் கட்டிடத்தையும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளையும் நிர்மாணிப்பதற்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை ஆரம்ப முதலீடாக 500 மில்லியன் ரூபாவாவை ஒதுக்கத் தீர்மானித்தது.

இடைக்கால நிர்வாக ஒழுங்குபடுத்தல் என்ற வகையில் 1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் உத்தரவாத கம்பெனியாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) கூட்டிணைக்கப்பட்டது. அத்துடன் பின்வரும் பதவிவழி உறுப்பினர்கள் முதல் தொகுதி உத்தரவாதமளிப்பவர்களாகவும் 1999ஆம் ஆண்டு கூட்டிணைக்கப்பட்ட கம்பெனிகளின் (SLIIT) உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

பெயர் பதவி அமைச்சு / நிறுவனங்கள் உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
திரு. அன்டன் அல்ஃபிரட் செயலாளர் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் உணவு அமைச்சு மற்றும் மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
பேராசிரியர் எஸ். கருணாரத்ன துணை வேந்தர் மொரட்டுவ பல்கலைக்கழகம் உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
பேராசிரியர் எல். எல். ரத்னாயக்க டீன் - பொறியியல் பீடம் மொரட்டுவ பல்கலைக்கழகம் உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
திரு. திலான் விஜேசிங்க தலைவர் / DG முதலீட்டு சபை உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
திரு. ஆர். ஏ. பி. குணதிலக்க தலைவர் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
திரு. டி. பி. ஜி. என். லீலாரத்ன ஆலோசகர் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் உணவு அமைச்சு உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
டாக்டர். லலித் கமகே பணிப்பாளர் / CSC மொரட்டுவ பல்கலைக்கழகம் உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்
திரு. ஆர். தேனுவர சிரேஷ்ட கணக்காளர் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் உணவு அமைச்சு மற்றும் மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பிரதி பணிப்பாளர் உறுப்பினர் / உத்தரவாதமளிப்பவர்

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) 2000ஆம் ஆண்டு சனவரி மாதம் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமாவுக்காக 400 மாணவர்களைச் சேர்த்து கொள்ளுபிட்டியில் உள்ள BOC மெர்ச்சன்ட் டவர் கட்டிடத்தில் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்தது. அதன் பின்னர் அது தற்பொழுதுள்ள மாலபே கட்டிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

slit1இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) 2003 மார்ச் 19ஆம் திகதி மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்துடனும் (MTF) இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்துடனும் (SLIIT) முகாமைத்துவ உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டது. உடன்படிக்கையின் நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களுடன் காணியின் பெறுமதி மற்றும் ஏனைய அனைத்து வளங்கள் மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்குச் (MTF) சொந்தமான உபகரணங்கள் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) எதிர்கால மூலதன அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வைத்துக்கொள்ளுகின்ற தேறிய வருமான உற்பத்திகள் அனைத்தையும் மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு (MTF) மாற்ற வேண்டும்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மிக வெற்றிகரமாக இயங்கிவந்துள்ளது. ஆது இப்பொழுது பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு ஆகிய இரண்டு நிகழ்ச்சித்திட்டங்களையும் நடத்துகின்றது. உலகத்தின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் உட்பட 9000க்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.

பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு ஆகிய இரண்டு நிலைகளுக்கும் பின்வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

  • கணினி
  • பொறியியல்
  • வணிகம்
  • மனிதநேயம் மற்றும் அறிவியல்