சனாதிபதி நிதியம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் 1978ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனமாக கூட்டிணைக்கப்பட்டுள்ளது.
இந் நிதியம் சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பாதுகாப்பில் அலுவலக சேவையைப் பாராட்டுவதற்காக நடத்தப்பட்ட ஆரம்ப விழாவில் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட ரூ. 237,120 ஆரம்ப மூலதனத்தைக் கொண்டு இந்த நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நிதியம் சனாதிபதி நிதியம் என அழைக்கப்பட்டது. இந்த நிதியத்தை முகாமைப்படுத்தும் பணி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சனாதிபதியின் அதிகாரத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சனாதிபதி நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வாளர் நாயகத்தினால் வருடாந்தம் கணக்காய்வுசெய்யப்படுகின்றது. இந்த நிதியம் இலங்கைப் பிரசைகளுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குகின்றது. இலங்கைப் பிரசைகளின் சத்திரசிகிச்சைளுக்கு/ மருத்துவ சிகிச்சைகளுக்கு சனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அங்கீகாரத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் மொத்த இலாபம் சனாதிபதி நிதியத்திற்குச் செல்கிறது. அதன் பின்னர் இலாபத்தின் ஒரு பகுதி ஆவுகுக்கு அனுப்பப்படுகின்றது.
முகவரி : இல. 41, ரேணுகா கட்டிடம், ஜனதிபதி மாவத்தை கொழும்பு 01. தொலைபேசி : +94 11 2354354 / +94 11 2382316 / +94 11 2331245 / +94 11 2431610 தொலைநகல்: +94 11 2331243 மின்னஞ்சல் : fundsecretary[at]presidentsoffice.lk |