"மஹபொல" எண்ணக்கரு 1980ஆம் ஆண்டு காலஞ்சென்ற கௌரவ. லலித் அத்துலத்முதலி (P.C) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கிராமிய சமூகத்தின் வறுமையை ஒழிக்கும் நோக்கில் கல்வியறிவுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கு திறந்த பொருளாதாரத்தின் நன்மையை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வர்த்தக மற்றும் கப்பற் துறை அமைச்சினால் ஒரு வர்த்தக சந்தையாக மாத்திரம் ஒழுங்கு செய்யப்பட்டது.

Recognizing the importance of systematic administration for the income of the Mahapola Exhibitions, late Hon.Lalith Athulathmudali created a scholarship trust by way of the Mahapola Higher Education Scholarship Trust Fund Act No.66 of 1981 to provide Scholarship for the underprivileged youth to complete their higher education and creation of equal opportunities through the development of facilities for higher education. The fund granted Mahapola scholarship for 422 university students for the first time in 1981.

Then one of the main successful program implemented under Mahapola concept was Mahapola concept was Mahapola Exhibition and Trade Fair has given many socio-economic benefits to the Sri Lanka, particularly to rural and semi urban folks by way of creating opportunities to sell domestically produce goods at trade stalls. To buy BOI factory permissible products and fun and entertainment activities not reach at village level at low cost. These seven-day trade fairs gave the small-scale entrepreneurs the space and opportunity to sell their products. Obtaining knowledge and experienced of industries and products, services offered by various Government and Non-Government Institutions at their door steps.

வர்த்தக சந்தையும் கல்வி கண்காட்சியும் கிராமிய பாடசாலைகளில் ஒழுங்குசெய்யப்பட்டன. அவற்றிற்கான அனுமதி சீட்டுக்களை விற்பனை செய்வதன்மூலம் பெற்ற பணம் அப்பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட்டது. 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மக்கள் இந்த மஹபொல வர்த்தக சந்தைக்கு அதிக ஆர்வம் காட்டினர். அதன் பின்னர் மக்கள் கண்காட்சியில் கவனம் செலுத்தாததால் அது வீழ்ச்சியடைந்தது. அத்துடன் கண்காட்சியில் பெற்ற வருமானத்திற்கு மேல் செலவு அதிகமாக இருந்தது. கடைசியாக கண்காட்சி பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்பொழுது மஹபொல நம்பிக்கை நிதியம் 2019ஆம் ஆண்டிலிருந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து மகாபொல வர்த்தக சந்தையையும் கல்வி கண்காட்சியையும் மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. அவர்கள் மகாபொல வர்த்தக சந்தையையும் கல்வி கண்காட்சியையும் மீள ஆரம்பிப்பதற்காக தமது உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவன ரீதியான ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு உடன்பட்டுள்ளனர்.